இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சாதாரண நாட்களில் நாள்தோறும் அரிசி சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், ஊறுகாய் ஆகியவை 100 நபர்களுக்கு வாழை இலையில் பரிமாறப்படுகிறது. அமாவாசை தினத்தன்று 300 நபர்களுக்கு இவ்வகை உணவு வழங்கப்படுகிறது. அனைத்து வெள்ளி கிழமைகளில் வடை, பாயாசத்துடன் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.