அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர் - 641663, திருப்பூர் .
Arulmigu Vazhai Thottathu Ayyan Temple, V. Ayyampalaiyam, Samalapuram - 641663, Tiruppur District [TM010053]
×
Temple History
புராண பின்புலம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன், திரு.சின்னையன் என்ற இயற்பெயர் கொண்டு விளங்கினார். சிறு வயது முதலே இடைவிடாமல் சிவ வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் சித்தர் ஒருவரால் சர்வ விஷ சம்மார மந்திரமும், பஞ்சாட்சர மந்திரமும் உபதேசிக்கப்பெற்று, தன்னை நாடி வரும் நோயுற்றவர்களுக்கும், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கைம்மாறு கருதாது சிகிச்சை அளித்து அருள்செய்து வந்தார். தெய்வபக்தி, இரக்கம், சாந்தம், பொறுமை, சத்தியம் ஆகிய அரும்பெருங்குணங்களைப்பெற்று விளங்கிய திரு.சின்னையன் வாழைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்ததால் வாழைத்தோட்டத்து அய்யன் என ஊர்மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
சிவபக்தரான...திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன், திரு.சின்னையன் என்ற இயற்பெயர் கொண்டு விளங்கினார். சிறு வயது முதலே இடைவிடாமல் சிவ வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் சித்தர் ஒருவரால் சர்வ விஷ சம்மார மந்திரமும், பஞ்சாட்சர மந்திரமும் உபதேசிக்கப்பெற்று, தன்னை நாடி வரும் நோயுற்றவர்களுக்கும், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கைம்மாறு கருதாது சிகிச்சை அளித்து அருள்செய்து வந்தார். தெய்வபக்தி, இரக்கம், சாந்தம், பொறுமை, சத்தியம் ஆகிய அரும்பெருங்குணங்களைப்பெற்று விளங்கிய திரு.சின்னையன் வாழைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்ததால் வாழைத்தோட்டத்து அய்யன் என ஊர்மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
சிவபக்தரான அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் சிவனின் வாகனமான வெண்ணிறக்காளை மாடொன்றை அன்புடன் வளர்த்து வந்தார். நந்தியின் சொரூபமான அக்காளை மாட்டை தன் கண்ணுள் மணியாய் உயிரினும் உயர்வுடையதாய் மதித்து வளர்த்து வந்தார். சிவ பக்தியில் திளைத்த அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் நாளடைவில் பூவுலக கவலை ஏதுமின்றி எந்த நேரமும் இறைவனை தொழுவதும், தியானத்திலிருப்பதும், காளையை பாதுகாப்பதும் என இருந்தார். நாட்கள் போக போக உலக வாழ்வில் பற்றற்று அதிக நேரம் தியானத்தில் இருக்கலானார். தனது 72வது வயதில் இறைவன் அய்யனின் மெய்யன்புக்கு மகிழ்ந்து நந்திதேவர் மூலமாக உன்னை தம்மிடத்துக்கு அழைத்துக் கொள்வார் என சித்த புருஷரால் அருள்வாக்கு பெற்று தான் வளர்த்து வந்த காளை மாடு முட்டியதால் மார்கழித்திங்கள் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபேறு அடைந்த, அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சூரியனை கண்ட பனி விலகுவது போல பக்தர்களின் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிப்பவராகவும், மற்றும் அனைத்து வகையான விஷ கடிகளுக்கு அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யனின் புற்று மண் பிரசாதம் அருமருந்தாக இருந்து தீர்வு அளிக்கின்றது.
அவர் சிவப்பேறு அடைந்ததற்குப்பிறகு அவர்தம் வழிவந்த மக்கள், அவரது தோட்டத்தில் உள்ள கிளுவை மரத்தின் அடியில் அவ்ர் வழிபட்ட சிவலிங்கத்தையும், நந்தியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அதன் அருகே பாம்புப்புற்று ஒன்று தோன்றியது. பின்னாளில் மக்கள் அனைவரும் சிவலிங்கத்தை வழிபாடு செய்து அனைத்து வகையான பிரச்சனைகளும் நீங்கப்பெற்று, மற்றும் அனைத்து வகையான விஷக்கடிளால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கப்பெற்று நலம் பெற்று விளங்கினர். அய்யனை கண்டால் சூரியனை கண்ட பனிபோல் பல்வினையும் விலகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யனுக்கு, கவின்மிகு ஆலயம் கட்டப்பட்டு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு செய்து வருகின்றனர். இன்றும் இத்திருக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அய்யன் முக்தி அடைந்த நாளான மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் அவரது குருபூஜை திருவிழா இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா அன்று அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் உச்சவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும் மற்றும் மலர்பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும். திருக்கோயில் மூலவரின் சிறப்பு இத்திருக்கோயிலின் கருவறை நோக்கிச்சென்று கிளுவை மரத்தடியில் வாழைத்தோட்டத்து அய்யன் முறுக்கிய மீசையுடனும், தலைப்பாகையுடனும், கையில் தண்டத்துடன் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறார். தான் வழிபட்ட சுயம்பு லிங்கம் மற்றும் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தான புற்றுநீர் மண்ணுடன் அருள்பாலிக்கிறார். திருக்கோயிலின் கருவறை விமானத்திற்கு பதிலாக வெட்டிவேரால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தல விருட்சமான கிளுவை மரம் உள்ளிருந்து மேல் நோக்கி பரந்து, விரிந்து மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. நம்பிக்கையுடன் இத்திருத்தலம் வந்து மூலவர் அருள்மிகு அய்யனை தரிசித்தால் சூரியனைக்கண்ட பனிபோல பல்வினையும் விலகும்.
ஸ்ரீ வாழைத்தோட்டத்து அய்யனே போற்றி